ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்கவில்லை குற்றவாளி சமூகத்தில் கண்ணீருடன் உறவினர்கள்.
வவுனியாவில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வீட்டில் தனியாக இருந்தபோது பாலியல் வல்லுறவிற்விற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி 14வயதில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது வழக்கு விசாரணைகள் வவுனியா நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது.
இன்று (26.11) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில் எவ்வித முன்னேற்றமும் இன்றி எதிர்வரும் 30.04.2019 அன்றைய தினத்திற்கு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஹரிஸ்ணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் குறித்து ஹரிஸ்ணவியின் சித்தி மேலும் தெரிவிக்கும்போது,
கடந்த 2016 ஆம் ஆண்டு இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாலியல் வன்புணர்விற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
வழக்கு விசாரணைகள் திகதியிடப்பட்டு செல்லப்படுகின்றதே தவிர வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் காலதாமதம் ஏற்படுகின்றதே தவிர குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.
இன்று இடம்பெற்ற விசாரணைகளின்போதும் சட்டமா அதிபருக்கு இவ்வழக்கு விசாரணையை துரிதப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வழக்கு விசாரணைகளின் போதும் இவ்வாறு சட்டமா அதிபருக்கு கடிதம் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றும் இதே போலவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வழக்கு விசாரணைகளில் எவ்வித முன்னேற்றங்களும் எற்படவில்லை எமது மகளின் படுகொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரும் இன்றைய வழக்கு விசாரணைக்காக சமூகமளித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இன்று வரையிலும் வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கு நீதி கிடைக்கவில்லை குற்றவாளி சமூகத்தில் நடமாடிக்கொண்டிருக்கின்றார். என்று கண்ணீருடன் மேலும் தெரிவித்துள்ளார்.