யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்நாள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
யாழ். தீவகம் சாட்டி துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கான ஈகை சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் நினைவெழுச்சி நாள் மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மாலை 6.05 மணிக்கு மாவீரர்களை நினைவுகூர்ந்து மலர்களை தூவியும், மலர் மாலைகளை அணிவித்தும், தீபங்களை ஏற்றியும் உறவினர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.