மோசமான நிலையில் இலங்கை! மைத்திரிக்கு அம்பு விட்டுள்ள சந்திரிக்கா!
இலங்கையில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், பல்வேறு இரகசிய சந்திப்புகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரி – மஹிந்த கூட்டணியின் செயற்பாடு காரணமாக கடும் அதிருப்தி அடைந்திருந்த துமிந்த சலக நடவடிக்கைகளையும் புறக்கணித்திருந்தார்.
புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவி வழங்கப்பட்ட போதும் அதனை ஏற்காமல், விலகியிருந்தார்.
துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட மேலும் சில சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தனியாக பிரிந்து செயற்பட தீர்மானித்துள்ளனர்.
புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஏற்றுக் கொள்ள இந்தக் குழுவினர் மறுத்து வருகிறனர்.
இந்நிலையில் சுதந்திர கட்சியை காப்பாற்றும் வகையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க களத்தில் குதித்துள்ளார்.
துமிந்த திசாநாயக்க உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கும் தீவிர நடடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த தலைமையிலான குழுவினரை எதிர்கொள்ளும் சக்தியாக புதிய கூட்டணி அமையும் என சந்திரிக்கா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிய கூட்டணியின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தும் கலந்துரையாடல் இன்று இடம்பெற்றிருக்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.