கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இராணுவ வீரர் படுகாயம்!
ஓமந்தை – கொம்புவைத்தகுளம் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் கட்டி வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் இராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சிங்கரெயிமன் படையணியில் உள்ள பூனாவையை சேர்ந்த 40வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓமந்தை – கொம்புவைத்தகுளம் பகுதியிலுள்ள காட்டு பகுதியில் வெடி சத்தம் கேட்டதையடுத்து அப்பகுதியை பார்ப்பதற்காக நான்கு இராணுவ வீரர்கள் சென்றுள்ளனர்.
அவ்வாறு சென்ற சமயத்தில் காட்டு பகுதியில் கட்டி வைக்கப்பட்ட கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒரு இராணுவ வீரர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.