ஈழத்து இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் நேற்று காலமாகியுள்ளார். இந்தியாவில் பிறந்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் பிரித்தானியாவில் வாழ்ந்து வந்தவர். தமிழின் முக்கியமான எழுத்துக்களை மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம் ஈழத்து மற்றும் புலம் பெயர் படைப்புக்களையும் மொழிபெயர்த்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் இளமானிப் பட்டம் பெற்ற இவர் லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருந்தார்.
தமிழின் முன்னோடி எழுத்தாளர்களான மௌனி, புதுமைப் பித்தன் ஆகியோரின் படைப்புக்களை மொழியாக்கம் செய்ததுடன் அசோகமித்திரன், சுந்தரராமசாமி, அம்பை, இமயம் ஆகியோரின் எழுத்துக்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார்.
ஈழத்து மற்றும் புலம்பெயர் இலக்கியங்களை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்த லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ரோம்,
அண்மையில் வெளியிட்ட Lost Evenings, Lost Lives ஆங்கில மொழியாக்கம், ஈழத்தின் மூத்த தலைமுறை முதல் இன்றைய தலைமுறைக் கவிஞர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகளைஉள்ளடக்கியுள்ளது.
குளோபல் தமிழ்