மட்டக்களப்பை உலுக்கிய கொலைகள்! கருணா வெளியிட்டுள்ள பல அதிர்ச்சி தகவல்!
மட்டக்களப்பு – வவுணதீவு வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கருணா தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கும் கருணாவுக்கும் தொடர்பு இருப்பதாக இன்றைய நாடாளுமன்ற அமர்வில் நளின் பண்டார குற்றம் சுமத்தியிருந்தார்.
இது தொடர்பில் கருணாவிடம் வினவிய போதே கருணா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
“இந்த குற்றச்சாட்டை நான் முற்றாக மறுக்கிறேன். நளின் பண்டார பைத்தியக்காரத்தனமாக கூறுகிறார். நான் டுவிட்டர் தளத்தில் வெளிப்படுத்தியதாக கூறப்படும் விடயம் தொடர்பில் பேசுகின்றனர்.
உண்மையில் அந்த டுவிட்டர் தளம் என்னுடையது இல்லை. ஐக்கிய தேசியக் கட்சி வேண்டும் என்றே இவ்வாறான குற்றச் சாட்டை என்மீது திணிக்க முனைகிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “என்னிடம் முரளிதரன் என்னும் பெயரில் அமைந்த பேஸ்புக் கணக்கைத் தவிர வேறு டுவிட்டர் கணக்கு எதுவுமே இல்லை. தனது பெயரில் வேறு யாரோ அந்த கணக்கை இயக்குகின்றனர்.
இது தொடர்பில் நான் தொழிநுட்ப ரீதியாக ஆராய்ந்தபோது அவுஸ்திரேலியாவிலிருக்கும் நபர் ஒருவர் அதனை இயக்குவது தெரியவந்துள்ளது. அவரது பெயரும் எனக்கு தெரியும். தற்போதைக்கு அந்த பெயரை கூறமுடியாது.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.