இலங்கையின் அரசியல் நெருக்கடி! இந்திய நாடாளுமன்றில் விளக்கம்!
இலங்கையின் அரசியல் குழப்ப நிலை குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்திய நாடாளுமன்ற நிலையியல் குழுவிடம் விளக்கமளிக்கவுள்ளனர்.
இந்தக்குழு காங்கிரஸ் தலைவர் ராஹூல் காந்தியின் தலைமையில் இயங்கி வருகிறது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பநிலை, இதன் காரணமாக இலங்கை இந்திய உறவில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை, இந்திய அரசாங்கம் இந்த விடயத்தில் தீர்வுக்காக ஏதாவது திட்டங்களை முன்வைத்துள்ளதா?
இதன் பங்களிப்பு என்ன? இந்தநிலையில் சீனாவின் தலையீடுகள் எவ்வாறு இருக்கின்றன? மற்றும் இலங்கையின் பிரச்சினை காரணமாக இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் சார்ந்த பிரச்சினைகள் போன்ற விடயங்கள் தொடர்பிலேயே இந்த விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
ஏதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதியன்று இந்த விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் தற்போதைய குழப்ப நிலையை பொறுத்தவரை இந்தியா தலையிடாக் கொள்கையை கடைப்பிடித்து வருகிறது.
சீனாவை பொறுத்தவரையில் அந்த நாடு மாத்திரமே ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவை இலங்கையின் பிரதமராக ஏற்றுக்கொண்டுள்ளது.