ஜனாதிபதி- பசிலுக்கிடையில் சந்திப்பு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பகரமான அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைபெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும் இச்சந்திப்பு சுமார் 1 மணித்தியாலத்திற்கு மேலாக இடம்பெற்றதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதன்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் இன்னும் தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
இதேவேளை மைத்திரி- மஹிந்த தலைமையில் எதிர்காலத்தில் அரசாங்க நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பிலும் தற்போதைய அரசியல் சிக்கலுக்கு தீர்வை முன்வைப்பது தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடல் நடைபெற்றிருக்கலாமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.