அடுத்த 24 மணித்தியாலத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன்!
இன்று நாட்டில் ஒரு அரசு இல்லை, எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இன்று மாலை இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் இன்று நாட்டில் ஒரு அரசு இல்லை. அமைச்சரவை இல்லை.
எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் நான் ஒரு முடிவை எடுப்பேன் . தேசிய பாதுகாப்புச் சபையை அவசரமாக கூட்டவுள்ளேன். அரசியல் கைதிகளை விடுவிப்பது குறித்து அதிலும் ஆராயப்படும் எனவும் மைத்திரி இதன்போது கருத்து வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.