விரல்களை வெட்டிக்கொண்ட மனிதர்கள் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
மதம் தொடர்பிலான சடங்களுக்காக மனிதர்கள் தங்களது விரல்களை வெட்டிக்கொண்டதாக வெளியாகியுள்ள தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதுதொடர்பில் சற்று விரிவாக பார்க்கலாம்……
வரலாறுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்கள் மதம் தொடர்பான சடங்கு ஒன்றிற்காக தங்களது விரல்களை வெட்டிக் கொண்டிருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து கிடைக்கப்பெற்றுள்ள குகை ஓவியங்களில் புராதன கால சாயங்களில் தோய்த்து சுவர்களில் பதிக்கபட்டுள்ள கை அடையாளங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த ஓவியங்களில் பலவற்றில், சில விரல்களைக் காண இயலாததால், அவை பலி கொடுக்கப்படுவதற்காக வெட்டப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
உலகம் முழுவதிலும், குகை ஓவியங்களில், ஒரு விரல் இல்லாத கை அடையாளங்கள் சர்வ சாதாரணம். ஆப்பிரிக்கா, யூரேசியா, ஓசீனியா மற்றும் அமெரிக்கா உட்பட பல இடங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்கள், விரலை வெட்டிக் கொள்ளும் வழக்கம் 121 சமூகங்களில் காணப்பட்டதாக தெரிவிக்கின்றன.
உதாரணத்திற்கு, பிரான்சின் Grotte de Gargas இல் 50 மனிதர்கள் வாழ்ந்த ஒரு இடத்தில் அவர்களது 231 கை அடையாளங்கள் கிடைத்துள்ளன.
அவற்றில் கிட்டத்தட்ட பாதி கை அடையாளங்களில் (114) ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட விரல்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வாளர்களைப் பொருத்தவரையில், இதற்கு காரணம் ஒரு மத சடங்கிற்காக கொடுக்கப்பட்ட பலியாகத்தான் இருக்கும் என கருதப்படுகிறது.
அதே நேரத்தில் சில அறிவியலாளர்கள் பனியால் பாதிக்கப்பட்டு சிலரின் விரல்கள் அழுகிப்போயிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.
எது எப்படியோ தற்போது வெளியாகியுள்ள குறித்த தகவலானது பண்டைய காலத்தில் மக்கள் சமய சடங்குகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை வெளிக்கொணர்ந்துள்ளது எனலாம்..