உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற தமிழர் யார்?

உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற தமிழர் யார்?

2018 ஆம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இந்த ஆண்டு உலக அளவில் டுவிட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் குறித்த பட்டியல் வெளிவந்துள்ளது.

அந்த பட்டியலில் செல்வாக்குப் பெற்றோர் வரிசையில் ஒஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மான் 10 ஆவது இடத்தில் உள்ளார்.

உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற முதல் பத்து இடங்களில் உள்ள ஒரே தமிழர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற ஆண்கள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் இந்த பட்டியலில் 8 ஆவது இடத்தில் பொலிவூட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளார். கடந்த ஆண்டின் முதல் பத்து இடங்களில் அமிதாப் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்கு பெற்ற பெண்கள் பட்டியலில் டெய்லர் சுவிப்ட், கேட்டி பெர்ரி, கிம் கர்தர்ஷன், டெமி லோவோட்டோ, எலன், செலீனா கோம்ஸ், ஷகிரா, ஜெனிபர் லோபஸ், ரிஹான்னா, லேடி காகா ஆகியோர் உள்ளனர்.

Copyright © 7718 Mukadu · All rights reserved · designed by Speed IT net