முல்லைத்தீவில் கவனயீர்ப்பு: பட்ட கஷ்டம் மறந்து போய் விட்டதா?
வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் கொலையினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவித்து முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு – முள்ளியவளை, நீராவிப்பிட்டியில் இன்று இக்கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள் கொலையினை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம், மீண்டும் யுத்தம் எமக்கு வேண்டாம் எனவும் இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களினால் கோசம் எழுப்பப்பட்டுள்ளது.
எமது பிள்ளைகளுக்கு சுதந்திரமான நாடு வேண்டும், பட்ட கஷ்டம் மறந்து போய் விட்டதா? மீண்டும் யுத்தம் எமக்கு வேண்டாம் ஆகிய வாசகங்கள் எழுதப்பட்ட பாததைகளையும் கைகளில் ஏந்தியவாறு இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
முஸ்லிம் சமூகத்தினர் இந்த போராட்டத்தில் முன்னணிவகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.