மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெறும் தமிழ் குடும்பத்திற்கு 5000 ரூபாய்!

மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெறும் தமிழ் குடும்பத்திற்கு 5000 ரூபாய்!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் மூன்று பிள்ளைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் யோசனை மட்டக்களப்பு மாநகரசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவனால் நேற்று கொண்டுவரப்பட்ட இந்த பிரேரணை உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழர்களின் தொகையில் காணப்படும் வீழ்ச்சியை கருத்தில்கொண்டும், எதிர்காலத்தில் தமிழர்களின் செறிவினை அதிகரிக்கவேண்டும் என்ற அடிப்படையில் குறித்த பிரேரணையினை தான் கொண்டுவந்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் கூறியுள்ளார்.

இதற்கு தேவையான நிதியினை மாநகரசபை ஒதுக்கீடுசெய்வதுடன், புலம்பெயர் உறவுகளிடம் இருந்துபெற்றுக்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாநகரசபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் இதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கும் சபையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 6827 Mukadu · All rights reserved · designed by Speed IT net