இரணைமடுவில் இளைஞர்களின் மீன் வேட்டை!

இரணைமடுவில் இளைஞர்களின் மீன் வேட்டை!

இரணைமடுக் குளம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்களும், பாடசாலை மாணவா்களும் மீன் வேட்டையில் ஈடுபட்டிருப்பதை காண முடிந்தது.

36 அடிக்கு மேல் குளத்தின் நீா்மட்டம் உயா்ந்த நிலையில்  ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் குளத்தின் வான் கதவுகள் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் வான் பாயும் பகுதி ஊடாக குளத்திலிருந்து பெருமளவு மீன்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாடசாலை மாணவா்களும் பொதுமக்களும் இணைந்து மீன் வேட்டையில் ஈடுபட்டுள்ளனா்.

இதனை பெருமளவு மக்கள் வேடிக்கையாக பாா்த்துக் கொண்டதுடன், தாங்களும் மீன்வேட்டையில் கலந்து கொண்டிருந்தனா்.

Copyright © 8109 Mukadu · All rights reserved · designed by Speed IT net