மாத்தறை ஆரம்பிக்கப்பட்ட சக்கரநாற்காலி பயணம் கிளிநாச்சியிலிருந்து யாழ் நோக்கி சென்றது.

யுத்தத்தில் அவயங்களை இழந்த இராணுவ வீரரின் இன ஐக்கியத்தை வலியுறுத்தி பயணம்

கடந்த 3ம் திகதி மாத்தறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சக்கரநாற்காலி பயணம் இன்று கிளிநாச்சியிலிருந்து யாழ் நோக்கி சென்றது.

இலங்கையின் தென் எல்லையிலிருந்து பருத்தித்துறை வரை இரு கால்களையும் இழந்த கோப்ரல் பி.கே.கே கருணாரத்ன ஆரம்பித்த பயணம் இன்று பிற்பகல் கொக்காவில் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டு கிளிநொச்சி நகர் ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி சென்றது.

இதன்போது கிளிநொச்சி நகரில் இவருக்கு பலத்த வரவேற்பளிக்கப்பட்டது.

இரு கால்களையும் இழந்த இவர் சக்கர நாற்காலியில் இவ்வாறு பல மைல் தூரம் பயணிக்கின்றமை குறிப்பிடதக்கதாகும்.

சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினத்தன்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணம் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பயணம் நாளை பருத்திதுறையில் நிறைவடைய உள்ளமை குறிப்பிடதக்கதாகும்.

Copyright © 9233 Mukadu · All rights reserved · designed by Speed IT net