அமைச்சரவை இடைக்கால தடைக்கு எதிரான மனு ஒத்திவைப்பு
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் நீடிப்பதற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை யை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை மறுதினம் (14) எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
குறித்த மனு இன்றைய தினம் (12) உச்ச நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த ஜயவர்தன, பிரசன்ன ஜயவர்தன, எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சரவைக்கு எதிராக பாராளுமன்றத்தில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவர்களால் குறித்த பதவிகளில் நீடிக்க அதிகாரம் இல்லை என உத்தரவிடுமாறு கோரி ஐக்கிய தேசிய முன்னணி உள்ளிட்ட 122 பாராளுமன்ற உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு கடந்த டிசம்பர் (03) ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோது இத்தடையுத்தரவை வழங்கப்பட்டமை குறிப்பிடத்கத்கது.
குறித்த குவோ வொரொன்டோ (Quo Warranto) ரிட் கட்டளை மனு மீதான் விசாரணை இன்றைய தினம் (12) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது அதனை, எதிர்வரும் 2018 ஜனவரி 16, 17, 18 ஆம் திகதிகளில் விசாரணைக்குட்படுத்த தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.