சஜித் பிரேமதாசவை கண்டு அச்சமடையும் ராஜபக்சவினர்!
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச மீது ராஜபக்சவினர் அச்சம் கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியூடாக சஜித் பிரேமதாச ஆட்சிக்கு வந்துவிடுவார் என்ற அச்சம் ராஜபக்சவினருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாலம்பே பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
“சஜித் பிரேமதாசவை நான் மதிக்கின்றேன். அவர் ஒழுக்கமாக சேவையாற்ற கூடியவர். கடந்த மூன்றரை ஆண்டுகளில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்.
சஜித் பிரேமதாச அமைச்சு பதவியை பெற்று சிறப்பாக செயற்பட்டார். இந்நிலையில், அவர் தொடர்பில் எமக்கு பாரிய எதிர்ப்பார்ப்பு இருக்கின்றது.
எதிர் காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக சஜித் பிரேமதாச அதிகாரத்திற்கு வருவார். இதனால் ராஜபக்சவினர் அச்சமடைந்துள்ளனர்.
இதனால் சில இடங்களில் அவரை தாமதப்படுத்துவதற்கு ராஜபக்சவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், நாம் அதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை” என மேலும் கூறியுள்ளார்.