பரபரப்பிற்கு மத்தியில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு!
இன்று வெளியாகிய நீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிக்கிறார் என தான் நம்புவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி சட்டவிரோதமானது என தெரிவித்து 7 நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் அவரது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
“நீதிமன்றின் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதிக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம்.
சட்டம் நீதித்துறை மற்றும் நிறைவேற்று அதிகாரம் இவை அனைத்தும் ஜனநாயகத்தின் மூன்று முக்கிய தூண்களாகும். அத்தோடு குடிமக்களின் இறையாண்மையையும் உறுதிப்படுத்த வேண்டும்.” என கூறியுள்ளார்