ரணிலுக்கு பிரதமர் பதவி உறுதி!
பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர் நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார்.
இதன்போது ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை வழங்க மறுக்காத போதிலும் ரணிலுடன் பேச்சுவதற்கு விருப்பம் இல்லை. அவர் மீது கடும் கோபத்தில் ஜனாதிபதி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டிருக்கும் தரப்பினருக்கு ஆட்சி அமைக்க அனுமதி அளிப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற அனுமதிக்குமாறு பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டது.
இதன்போது 117 உறுப்பினர்களுடன் பிரேரணை வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.