விரைவாக பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவேண்டும்!
உச்ச நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள தரப்பினர்களுக்கு ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசியல் அமைப்பை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் ஜனாதிபதி அந்த பதவியில் நீடிப்பது அவருக்கு மேலும் தீங்கு விளைவிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
“மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, எதிர்க்கட்சிக்கு செல்வதே சிறந்த தீர்வாகும். இதன் மூலம் ஜனாதிபதியால், நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை முடிவுக்குகொண்டுவர முடியும்.
நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கும், எதிர்கால சிறந்த சந்ததியினரை உருவாக்க வேண்டுமாக இருந்தால் இந்த முடிவை விரைவாக எடுக்க வேண்டும்” என குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.