அரசியலமைப்பு பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்து விட்டது!
இலங்கையின் அரசியலமைப்பு பிரச்சினைக்கு தற்போது தீர்வு கிடைத்து விட்டதாக இந்திய நாளிதழான த ஹிந்து தெரிவித்துள்ளது.
ஹிந்துவின் ஆசிரியர் தலையங்கத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரோக்கியமற்ற அரசியல் ஆலோசனைகள் காரணமாக ரணில் விக்ரமசிங்கவின் பதவி பறிக்கப்பட்டு மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் உள்நாட்டிலும், வெளிநாடுகளாலும் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக மீண்டும் இலங்கையில் அரசியல் ஸ்திர நிலை ஏற்பட்டுள்ளதாக த ஹிந்து குறிப்பிட்டுள்ளது.
இதில் முதலாவது கட்டமாக மஹிந்த பதவி விலகும் சம்பவம் இடம்பெறுகிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்படும் போது தற்போதைய பிரச்சினை நிறைவுக்கு வரும் என்றும் த ஹிந்து தெரிவித்துள்ளது