எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் மகிந்த தரப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோரும் மகிந்த தரப்பு!

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும், எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வழங்கப்பட வேண்டும் என இந்த முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல – நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் 18ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி பறிபோகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்ட யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற சிரமமான செயற்பாடுகளில் ஈடுபட ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேரிடும் எனவும் அபேகுணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2024 Mukadu · All rights reserved · designed by Speed IT net