நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பில் பொதுமக்கள் கருத்து!
மஹிந்த ராஜபக்ஷ இன்றைய தினம்(சனிக்கிழமை) தமது பிரதமர் பதவியினை இராஜினாமா செய்துள்ளமையினைத் தொடர்ந்து நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில் பொதுமக்கள் பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் ஒருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார், “ரணிலுக்கு கொடுப்பது சரியில்லை. மஹிந்தவிற்கே பிரதமர் பதவியினை வழங்க வேண்டும்.
அவர் யுத்தத்தினை முடித்து நாட்டை அபிவிருத்தி செய்து வந்தார். எமது நாட்டு மக்களுக்கு நல்லது கெட்டது தெரியாது“ என குறிப்பிட்டார்.
மற்றுமொருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார், “மஹிந்தவிற்கு 113 பெரும்பான்மை இல்லை என்பதனால்தான் நாட்டில் குழப்பங்கள் ஏற்பட்டன.
இந்த குழப்பமான நிலை காரணமாக எங்களை போன்ற எளியவர்கள் வாழ்வது கஸ்டமாகவுள்ளது. எனவே பொது தேர்தலுக்கு சென்று மக்கள் ஆணையுடன் புதிய பிரதமர் நியமிக்கப்பட வேண்டும்“ என தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய அரசியல் நிலைதொடர்பில் மற்றுமொருவர் இவ்வாறு கருத்து வெளியிட்டார், “மஹிந்த இருந்த மாதிரியே இருந்திருந்தால் இந்த பிரச்சனைகள் ஏதும் வந்திருக்காது.
இதனால் மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். யாரு பிரதமராக வந்தாலும் பரவாயில்லை. யாரு நாட்டை ஆண்டாலும் பரவாயில்லை. நாட்டை அபிவிருத்தி செய்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்“ என குறிப்பிட்டார்.