புதையல் தோண்டிய இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 15 பேர் கைது!
மட்டக்களப்பு வாழைச்சேனை நெடியாவெளி காட்டுபகுதி மலையொன்றில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 15 சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (சனிக்கிழமை) குறித்த 15 சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளதுடன் புதையல் தோண்டலுக்கு பயன்படுத்திய ஸ்கானர் மெசின் உட்பட்ட உபகரணங்களையும் அவர்களிடமிருந்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று அதிகாலை 4 மணிக்கு குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலேயே புதையல் தோண்டலில் ஈடுபட்ட மன்னாரில் கடமையாற்றும் இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 4 இராணுவத்தினர் உள்ளிட்ட 15 பேரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.