ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் தலைநகர் வில்னியசில் ‘சுமோக்கிங் பிக்’ என்ற ஹொட்டலில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் உதட்டுடன் உதடு முத்தமிடுவது போன்று சுவர் ஓவியம் வரையப்பட்டுள்ளது.
இது 6 அடி உயரத்தில் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இந்த ஓவியம் உலக நாடுகளில் வாழும் மக்களின் கவனத்தை ஈர்த்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து ‘சுமோக்கிங் பிக்’ ஹொட்டல் உரிமையாளர் டொமினிகல் சிகாஸ்கஸ் கூறும்போது, இந்த 2 ஓவியங்களும் எதிர்பாராமல் உருவானது. புடினும், டிரம்ப்பும் சந்தித்ததால் நடைபெறும் நிகழ்ச்சியை கற்பனை செய்து வரையப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார்.
லிதுவேனியா உள்ளிட்ட ‘ஸ்லேவிக்’ பிராந்தியத்தில் ஆண்கள் சந்திக்கும்போது உதட்டுடன் உதடு முத்தமிடுவது பாரம்பரிய பழக்கமாகும். அதன் அடிப்படையில் தான் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட உள்ளார். இவருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதற்கு டிரம்ப் நன்றி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கனடா மிரர்